நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை!
1. பொருளாதார சிக்கலை சமாளிக்க ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு நிதியுதவி!
2. கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும்; உலக நாடுகளை மண்டியிட வைத்து விட்டது கொரோனா வைரஸ்!
3. "அனைத்து இந்தியர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ; உள்நாட்டு சந்தையின் முக்கியத்துவத்தை கொரோனா உணர்த்தியுள்ளது"
4. "கொரோனா தொடங்கியபோது பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை ; ஆனால் இன்று தினசரி இரண்டு லட்சம் PPE கிட்களையும், 2 லட்சம் N95 முகக்கவசங்களையும் இந்தியா தயாரித்துவருகிறது "
5. "பெருமையோடு உள்நாட்டு பொருட்களை வாங்க இந்தியர்கள் உறுதியேற்க வேண்டும் "
6. உலகம் என்பது ஒரு குடும்பம் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு, நமக்கு
எப்போதும் சுயநலமில்லை ; இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு
வித்திடும் !
7. 4ம் கட்ட ஊரடங்கு குறித்த விவரங்கள் மே 18ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும்; மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும்!